Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புலமைப் பரீட்சையில் மாத்தளை பாடசாலையொன்றில் விடையளிக்க வழங்கப்பட்ட காலம் தொடர்பாக குழப்பம்

நேற்று நடைப்பெற்ற புலமை பரிசில் பரீட்சையின் போது மாத்தளை – வில்கமுவ நுககொல்ல பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு பகுதி ஒன்றுக்கான வினாத்தாளுக்கு விடையளிக்க வழங்கப்பட்ட காலம் தொடர்பாக சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பாடசாலையில் அமைக்கப்பட்ட பரீட்சை மண்டபமொன்றுக்குள் குறித்த வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்ட போதும் தாம் கூறும் வரை விடைகளை எழுத வேண்டாமென அங்கிருந்த மேற்பார்வையாளர்கள் அறிவித்துள்ள நிலையில் பரீட்சை முடிவடைவதற்கு 20 நிமிடங்கள் இருக்கையில் இன்னும் 20 நிமிடங்களே இருப்பதாக அறிவித்துள்ளதாகவும் அதன்பின்னரே தாம் விடைகளை எழுதியதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தாம் கேள்விகளை முறையாக வாசிக்காதும் விளங்கிக்கொள்ள முடியாமலும் அவசரமாக விடையளித்ததாகவும் இதனால் தமக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் பாடசாலையின் முன்னால் கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் , பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன் அது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments