குடிவரவு – குடியகல்வு திணைக்களம் இம்மாதம் 29ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் இயங்கவுள்ளது என்று குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – புஞ்சிபொரளை, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள பிரதான அலுவலத்தின் செயற்பாடுகளும், மாத்தறை, கண்டி அலுவலகங்களின் பணிகளும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெற மாட்டாது என்று குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 29ஆம் திகதி திங்கட் கிழமை பத்தரமுல்லை புதிய அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் அடிப்படையில் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் கட்டுப்பாட்டாளர் கூறினார். ஆனால், அன்றைய தினத்தில் விசா, பிரஜாவுரிமை தொடர்பான சேவைகள், கடவுச்சீட்டுத் திருத்தம் போன்ற சேவைகள் இடம்பெறும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments