Advertisement

Responsive Advertisement

செப்டம்பர் 1 ஆம் திகதி இலங்கை வருகிறார் பான் கீ மூன்: 3 நாட்கள் தங்கியிருப்பார்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இறுதியுடன், ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், பான் கீ மூன் இலங்கைக்கு இரண்டாவது பயணத்தை, அடுத்த மாதம் மேற்கொள்ளவிருக்கிறார்.
செப்ரெம்பர் 3 திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார். இதன் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் பலரையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐ.நா மற்றும் அனைத்துலக தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பனவற்றில் அவர் கவனம் செலுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments