Advertisement

Responsive Advertisement

மட்டு கறுவப்பங்கேணி ஸ்ரீசிவநாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த தீர்த்த உற்சவம்

மட்டக்களப்பு கறுவப்பங்கேணி ஸ்ரீசிவநாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று காலை நடைபெற்ற தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெற்றது.
வேம்புமர நிழலில் வீற்றிருந்து வேண்டுவோர் வினை தீர்க்கும் ஸ்ரீசிவநாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
ஆறு தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் அலங்கார உற்சவத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் நேற்று மாலை காவடி ஆட்டம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இன்று புதன்கிழமை ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலமாக மட்டக்களப்ப மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணிக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பெருமளவான அடியார்கள் புடை சூழ தீர்;தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
IMG_0158IMG_0160IMG_0236

Post a Comment

0 Comments