Advertisement

Responsive Advertisement

ஓமானுக்கு சென்றவர் அங்கு பஸ்சில் மரணம் -சோகத்தில் மூழ்கிய மட்டக்களப்பு மாமாங்கம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் அமிர்தகழி பகுதியைசேர்ந்த ஒருவர் ஓமானுக்கு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து ஓமானுக்கு சென்றவர் ஓமானில் தனது தொழில் இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும்போது பஸில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
அமிர்தகழி,எதிர்மன்னசிங்கம் வீதியை சேர்ந்த பொ.ரெட்னராஜா (56வயது)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்த உறவினர்கள் சடலத்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மிகவும் குடும்ப கஸ்டமான நிலையில் தொழில்வாய்ப்பினைபெற்றுச்சென்றவரின் மறைவு அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments