Advertisement

Responsive Advertisement

பிரியாவிடை “இறுதித் தீர்மானம்” குறித்து டில்ஷான் வாய்திறந்தார்.

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான திலகரத்ன டில்ஷான் தனது பிரியாவிடை குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“தான் தற்போதைக்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த ஒரு தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா உடன் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியின் பிற்பாடு டில்ஷான் ஓய்வு பெறுவதாக ஊடகங்கள் அறிவித்திருந்த நிலையிலேயே திலகரத்ன டில்ஷான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்; ஊடகங்களில் பரவலாகும் குறித்த கதையானது வெறும் ஊடகங்களின் ஊகம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments