மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு மில்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.கணகராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டதுடன், பாடசாலை அதிபர் பஞ்சாசரம், பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான கதிர்காமத்தம்பி, மோகன், குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments