கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் 150 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று காலை கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வெளிவந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு வெள்ளவத்தை பெர்னான்டோ மாவத்தை பகுதியில் நேற்று மாலை அவர்கள் நடத்திய திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
0 Comments