Advertisement

Responsive Advertisement

கொழும்பிலும் கண்ணீர்புகைக் குண்டு தாக்குதல் : மாணவர்களின் பேரணி மீது நடத்தப்பட்டது

கல்வித்தறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரினால் கண்ணீர் புகைக் குண்டுதாக்குதல் மற்றும் நீர்த்தாரை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவர்கள் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து அலரிமாளிகை நோக்கி பயணிக்க முற்பட்ட போது கொள்ளுப்பிட்டி சந்திப்பகுதியில் கண்ணீர்புகை குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments