16 வயது மாணவியொருவர் போதையில் வீதியில் விழுந்துக்கிடந்த சம்பமொன்று அனுராதபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.
அனுராதபுரம் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவி நேற்று காலை தனியார் வகுப்பொன்றுக்காக வீட்டிலிருந்து சென்றிருந்த போது தனது காதலனுடன் சேர்ந்து பியர் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் போதை தலைக்கேரி நடக்க முடியாது தள்ளாடிய நிலையில் அந்த மாணவியை ரயில் பாதைக்கு அருகில் கைவிட்டுவிட்டு காதலன் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து அந்த மாணவி அங்கு விழுந்துக் கிடப்பதை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்தை தொடர்ந்து அவரை அங்கிருந்து அழைத்துச் சென்ற பொலிஸார் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
0 Comments