Home » » ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுருவியுள்ளார்

ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுருவியுள்ளார்

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணை­களின் போது Arrow.lk எனும் பேஸ் புக் கணக்கொன்றின் ஊ­டாக இலங்­கையின் 37 இணை­யத்­த­ளங்கள் ஊடு­ருவல் செய்­யப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டள்ளது.
இந்த பேஸ் புக் கணக்­கா­னது ‘யக்கடயா போரம்” (yakadaya forum) எனும் பெயரில் ஆரம்­பிக்­கப்­பட்ட குழு­வொன்­றுடன் இணைந்து செயற்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டது.
இந்த ‘யக்கடயா போரம்” மேல­தி­க­மாக ரத்து உகுஸ்ஸா, சுமேதா தன விஜய, கோயா ஹெக்கர் (goyahacker) ஆகிய பெயர்­க­ளிலும் பேஸ்புக் கணக்­குகள் உள்­ள­மையும் அவை­ய­னைத்தும் இணை­யத்­தள தகவல் ஊடு­ருவல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதும் கண்­ட­றி­யப்­பட்­டன என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |