பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார்.
இதனையடுத்து சரத் வீரவங்சவைக் கைதுசெய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments