கொட்டாஞ்சேனை சென் பெனடிக் மாவத்தை பகுதியில் வீடொன்றிலிருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை , மகன் மற்றும் மகள் ஆகிய மூவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
0 Comments