வடமாகாணத்தில் உள்ள 37 பாடசாலைகளில் தலா நாற்பத்தி ஏழு இலட்சம் ரூபறுமதி செலவில் அதிபர் விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள் ளதெரிவு செய்யப்பட்ட 37 பாடசாலைகளில் தலா 47 இலட்சம் ரூபா வீதம் ஆயிரத்து 739 இலட்சம் ரூபா செலவில் அதிபர் விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆறு பாடசாகைளிலும் மன்னார் மாவட்டத்தில் நான்கு பாடசாலைகளிலும் வவுனியா மாவட்டத்திலும் ஆறு பாடசாலைகளிலும் யாழ் மாவட்டத்தில் பதினாறு பாடசாலைகளிலும் என 37 பாடசாலைகளில் தலா 47 இலட்சம் பெறுமதியில் குறித்த விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
0 Comments