2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வியியற் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம் ஏ.எச்எம் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான ஆரம்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியியற் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
கல்வியற் கல்லூரிகளுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளாமை காரணமாக பல்வேறு சிக்கல்கள் எழுந்திருந்திருந்தன.
குறிப்பாக சில பாடசாலைகளுக்கான ஆசிரியர் பற்றாகுறையை நிவர்த்திப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments