வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் நோக்கில் கிழக்கில் ஆறுமுகநாவல் விழாவும், வடக்கில் விபுலானந்தர் விழாவும் நடைபெறுகின்றது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்றம் நடாத்தும் சுவாமி விபுலானந்தர் விழா யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை இங்கு கலந்து கொண்டு கருத்துரைத்த, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும், இந்து ஆராய்ச்சி நிலைய இயக்குநருமான சைவஞானபானு, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், கிழக்கிலங்கை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் சுவாமி விபுலானந்தர் என்றார்.
இந்நிகழ்வின் இதன்போது அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பவள விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு மாமன்றத்தினால் இந்து ஒளி சஞ்சிகையினை பேராசிரியர் எஸ்.கோபாலகிருஸ்ணன் ஐயரினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இந்து ஒளி சஞ்சிகையின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.கோபாலகிருஸ்ணன் ஐயர் நிகழ்த்தினார்.
இங்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன், யாழ் பல்கலைக் கழக இந்து நாகரீகத்துறை விரிவுரையாளர் சி.ரமணராஜா, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் சா.மதிசுதன், சைவப்;புலவர் திருமதி.சிவானந்தஜோதி ஞானசூரியம் ஆகியோரினால் சிறப்பு பேருரை இடம்பெற்றது.
சிறப்பு பேருரை ஆற்றியவர்கள் மற்றும் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மங்கையர்கரசி மகளீர் இல்ல மாணவிகளின் காத்தவராயன் சிந்துக்கூத்து நாடகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும், இந்து ஆராய்ச்சி நிலைய இயக்குநருமான சைவஞானபானு, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆலோசகர் சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள்,
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் சா.மதிசுதன், பொருளாலர் நா.புவனசுந்தரம் மற்றும் மன்ற உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மற்றும் யாழ் மாவட்ட சிவதொண்டர் அணியினர், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கதிர்காமத்தை இழந்தோம் கீரிமலையையாவது பாதுகாப்போம்
கதிர்காமத்தை இழந்து விட்டோம் தற்போது கீரிமலையையும் இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற சுவாமி விபுலானந்தர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும், இந்து ஆராய்ச்சி நிலைய இயக்குநருமான சைவஞானபானு, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்றம் குறித்த நிகழ்வை நடாத்தியுள்ளது.
இதில், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பிரமாச்சார்ய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆலோசகர் சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் சா.மதிசுதன், பொருளாலர் நா.புவனசுந்தரம் மற்றும் மன்ற உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மற்றும் யாழ் மாவட்ட சிவதொண்டர் அணியினர், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கதிர்காமம் தற்போது முழுதாக தமிழர்களிடம் இருந்து கைநழுவி சென்றுவிட்டது. அதே போல் கீரிமலையும் தமிழர்களான எம்மிடமிருந்து கைநழுவிக் கொண்டு செல்வதாகவும், இதை தடுத்து கீரிமலையை பாதுகாக்க வேண்டும் எனவும் கந்தையா நீலகண்டன் கூறியுள்ளார்.
0 Comments