கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாந்த அழகியற் கற்கை நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யபட்டுள்ள புத்தக கண்காட்சி எதிர்வரும் 19, 20, 21ம் திகதிகளில் நிறுவகத்தில் காலை 09.30முதல் மாலை 05.30வரை இடம்பெறவுள்ளது.
21ம் நூற்றாண்டானது தகவல் யுகம் என அடையாளப்படுத்தப்படுகின்ற நிலையில் சரியான தகவல் வளங்களை பயன்படுத்தாமல் ஒருவர் தனது கற்றல் இலக்கினை அடைதல் என்பது கடினமாகும். இத்தகைய பின்புலத்தில் நூல்களின் பாவனை வாசிப்பு என்பது கல்விசார் சமூகத்தில் காத்திரமான இடத்தினை பெறுகின்றது.
இப்புத்தக கண்காட்சியானது சமுதாயத்திற்கு சமகால மற்றும் அரிய தகவல்களை வழங்குவதையும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதையும் புலமைசார் தகவல் தளங்கள் சமூதாயத்திற்கு கிடைப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இதன்போது பல்வேறு நிறுவனங்களின், திணைக்களங்களின் வெளியீட்டு புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments