Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் பலி

கல்முனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கில் விபத்தில் இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை 17 திகதி  பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் சேனைக்குடியிருப்பு  பாடசாலைக்கு அருகாமையில் மண்டூர் பிரதேசத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிலும் சேனைக்குடியிருப்பில் இருந்து வந்த மோட்டார் சைக்கிலும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

இதில் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இலங்கை மின்சார சபையில்  பொத்துவில் அலுவலகத்தில் கடமையாற்றும் 2 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கவேல் 42 வயது என்பவரே உயிரிழந்துள்ளார்

Post a Comment

0 Comments