பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தினர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை பிரதமருக்கு அந்த சம்மேளனம் அனுப்பி வைத்துள்ளதுடன் அதற்கு சாதமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் வாரத்தில் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையாளர்களின் சம்பள விடயங்கள் , விரிவுரையாளர்கள் தொடர்பான சுற்றுநிருபம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.


0 Comments