மன்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச விளையாட்டு விழா பூர்த்தி செய்யப்படவில்லை. ஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்வாறான சம்பவங்களினால் எமது கிராமத்து விளையாட்டு வீர வீராங்கனைகளின் விளையாட்டு திறன் அழிக்கப்படுகிறது. அத்தோடு விளையாட்டு வீர வீராங்கனைகளும், பெற்றோர்களும் உளரீதிகா பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் தமிழரின் இருப்பு நிலை பல்வேறு ரீதியாக அழிக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு துறைசார் தமிழ் அதிகாரிகள் அசமந்த போக்கில் இருப்பது எமக்கு எதிர்கால சந்ததிகளின் திறனை வளர்த்தெடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டு உத்தியோகத்தர்களின் கவனத்திக்கு இவ்வாறான விசித்திரற்ற செயற்பாட்டை இத்தோடு நிறுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் எமது தமிழ் சமுகத்தின் விளையாட்டு திறன் காலத்திக்கு காலம் மறைக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகளில் தேசிய சர்வதேச ரீதியில் சாதித்து தமிழருக்கான வெற்றியின் இலக்கை அடைய முடியாது போகும்.
அத்தோடு இன்று மட்டக்களப்பு மாவட்டத்திக்கான விளையாட்டு நிகழ்வு வெபர் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இங்கு வேடிக்கை என்ன என்றால் அன்மையில் இலங்கை ஜனாதிபதி அவர்களால் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டதாக ஊடகங்களில் அறிய கூடியதாக இருந்தும் இன்று நடை பெற்று வரும் மாவட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பற்றும் விளையாட்டு வீர வீராங்கனைக்கு பாவனைக்கு விளையாட்டு அரங்கு முழுமையாக வழங்க முடியாத நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை உள்ளது. இது தொடர்பாக மாவட்ட அரச அதிபர் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து எமது சமுகத்தில் நடைபெற எமது சமுகத்தின் பொறுப்பு வாய்ந்த தமிழ் அதிகாரிகளே இதக்கு காரணம் என்பது நிதர்சனம் ஆகின்றது.
0 Comments