Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

27ஆம் திகதிக்கு பின் உயர்தர வகுப்புகளை நடத்த முடியாது : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப்  பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அதனுடன் தொடர்புடைய கருத்தரங்குள் மற்றும் வகுப்புகளுக்கு தடை விதிக்கும் வகையிலான பரீட்சைகள் திணைக்களத்தின் சட்டத்திற்கமைய  இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , வகுப்புகள் ,மாதிரி வினாத்தாள் விநியோகம் , குழு கலந்துரையாடல் என்பனவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை முடிவடையும் வரை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியயாதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தடையை மீறி யாரேனும் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments