அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஹிலரி கிளிண்டனை தனது அதிபர் வேட்பாளராக அறிவிக்க உள்ளது. ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் முக்கிய பேச்சாளர்களாக ஹிலரி, அவரின் முன்னாள் போட்டியாளர் பெர்னி சாண்டர்ஸ், மற்றும் நாட்டின் முதல் குடிமகள் மிஷெல் ஒபாமா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சாண்டர்ஸின் அதிபர் பிரசாரங்களில் முறைகேடு செய்ய கட்சியின் அதிகாரிகள் முயன்றதாக சுட்டிக்காட்டும் மின்னஞ்சல்கள் வெளியானதையடுத்து கட்சியின் பெண் தலைவர் பிலடெல்பியாவில் நடந்த மாநாட்டில் ராஜினாமா செய்துள்ளார்.
0 Comments