Advertisement

Responsive Advertisement

முரளி குறித்து பெருமையடையும் சங்கக்கார!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குறித்து குமார் சங்கக்கார பாராட்டு வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.
இது தொடர்பில் பலரும் பலவிதமாக கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் சங்கக்கார இவ்வாறு பாராட்டு வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார முரளி தொடர்பில் மிகவும் உன்னதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளமையானது சங்கக்காரவின் சிறந்த குணத்திற்கு எடுத்துக்காட்டாகவுள்ளது.
முத்தையா முரளிதரன் இலங்கைக்கு புகழையும், பெருமையையும் தேடி தந்த ஒருவர். அத்துடன், முரளி இலங்கையை என்றும் நேசிக்கும் ஒருவர் என சங்கக்கார தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, முத்தையா முரளிதரன் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தனது நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கும் ஒருவர் என குறிப்பிட்டு முரளியை சங்கக்கார பாராட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments