சவுதியில் தொழில்புரிந்துவரும் இலங்கையை சேர்ந்த ஒருவர் யேமன் பிரஜையால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சகாப்தீன் மொஹமட் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவ, கொரபொல பகுதியில் வசித்துவரும் குறித்த இளைஞன் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சவுதி – யோகி யன்வூ பகுதியிலுள்ள கண்ணாடி தொழிற்சாலையில் கடமையாற்றி வந்தார்.
குறித்த இளைஞனும், கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் யேமன் பிரஜையும் ஒரே இடத்தில் தங்கியிருந்ததாகவும், இருவருக்குமிடையில் ஏற்பட்டுள்ள வாய்த்தர்க்கமே கொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய யேமன் பிரஜை சவுதி பொலிஸாரால் கைதுசெய்ய்பட்டுள்ளதாக சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாசிம் குறிப்பிட்டார்.
0 Comments