கொழும்பின் புறநகர் பகுதியான மத்தேகொட நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு எதிரில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக கஹாதுடுவ பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 38 வயதானவர் எனவும் இவர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளாரா? என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments