Advertisement

Responsive Advertisement

பால் குடித்த குழந்தை உயிரிழப்பு

தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார்.
இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ். போதான வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
எனினும் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments