Home » » மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின்   வருடாந்த பரிசளிப்பு  விழா30.06.2016 வியாழக்கிழமை  இடம்பெற்றது .
மட்டக்களப்பு  மாவட்டத்தின் பிரபல பெண்கள் பாடசாலையான மட்டக்களப்பு   சிசிலியா பெண்கள் தேசிய  பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் இன்று பிற்பகல் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற வருடாந்த  பரிசளிப்பு  நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில்  சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .


பாடசாலையின்   வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் , வலயக் கல்விப்பணிப்பாளர்கள், அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் 






























Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |