வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள 37 பாடசாலைகளில் தலா 47 இலட்சம் ரூபா பெறுமதியான அதிபர்களுக்கான விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாணத்தில் இயங்கி வரும் கூடுதலான பாடசாலைகளில் அதிபர்களுக்கான விடுதிகள் ஆசிரியர்களுக்கான விடுதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றன.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள 37 பாடசாலைகளில் தலா 47 இலட்சம் ரூபா செலவில் அதிபர்களுக்கான விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
வடமாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் மன்னார் கல்வி வலயத்தால் நான்கு பாடசாகைளிலும் வவுனியா மாவட்டத்தில் ஆறு பாடசாலைகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆறு பாடசாலைகளிலும் யாழ் மாவட்டத்தில் பதினாறு பாடசாலைகளிலும் என 37 பாடசாலைகளிலும் ஒரு கோடியே 739 இலட்சம் ரூபா செலவில் இந்த அதிபர் விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments