5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நாடு பூராகவும் 2959 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன் அந்தப் பரீட்சையில் 350,701 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்கு நேற்று முதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 29ஆம் திகதிக்குள் அவை கிடைக்காவிட்டால் உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் பாடசாலை அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments