சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் வெடித்துச் சிதறிய பல்குழல் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட குண்டுகள் பல பல கிலோ மீற்றர் தூரங்களுக்கு சென்று வீழ்ந்துள்ள நிலையில் அதனால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.
குறிப்பாக அந்த பகுதியிலுள்ள ரணவிருகம என்ற கிராமத்திலுள்ள வீடுகள் பல குண்டுகள் வீழ்ந்து பலத்த சேதமடைந்துள்ளதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளை துளைத்துக்கொண்டு அந்த குண்டுகள் சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் குறித்த இராணுவ முகாமுக்கு ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டத்திலுள்ள மக்கள் இன்னும் அந்தப் பகுதியில் குடியேற்றப்படவில்லை. அந்த பகுதியில் ஆபத்துக்கள் இல்லையென உறுதிப்படுத்தும் வரை அவர்களை அங்கு குடியேற்ற முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments