Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன் உப அதிபர் செல்வி.சிவகுரு கோமதி அவர்கள் தனது சேவையில் இருந்து இன்று ஓய்வு பெற்றார்

பட்டிருப்பு தேசிய பாடசாலையின் உப அதிபர் செல்வி.சிவகுரு கோமதி தனது 32 வருட ஆசிரியர் சேவையினை நிறைவு செய்து இன்று (27.05.2016) ஓய்வு பெறுகின்றார். நாளையுடன் தனது 60 ஆவது வயதினையும் பூர்த்தி செய்யும் இவருக்கு பட்டிருப்பு தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், 
மாணவர்கள். இணைந்த கல்வி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இணைந்து மகத்தான பாராட்டு நிகழ்வினை நடாத்தினர்.

இப் பாடசாலையில் கடந்த 17 வருடங்களாக வரலாற்றுப்பாட ஆசிரியராகவும், உப அதிபராகவும் இருந்து பாடசாலையின் முகாமைத்துவத்திற்கும், மாணவர்களின் உயர்ந்த அடைவு மட்டத்திற்கும் இன்றுவரை அளப்பெரிய சேவையாற்றிய ஆசிரியையை அனைவரும் பாராட்டி கௌரவித்ததுடன் அவரின் ஆசீர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டார்கள்.

இவர் களுவாஞ்சிகுடி அதிபர் சிவகுரு, பார்வதி தம்பதியரின் இரண்டாவது மகளாவார். தனது பாடசாலைக் கல்வியினை மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், மட்/வின்சன் மகளீர் உயர்தரப் பாடசாலை, மட்/களுதாவளை மகா வித்தியாலயம் என்பவற்றில் கற்றதுடன், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பினையும், திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் முடித்துக் கொண்டார்.

1982 ஆம் ஆண்டு தொடக்கம் 1984 ஆம் ஆண்டு வரை "றெட்வானா" அரச சார்பற்ற நிறுவனத்தில் கடமையாற்றி, 1984 ஆகஸ்ட் 5 முதல் புத்தளம் முதலைப்பாடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தைப் பெற்றுக் கொண்ட இவர், புத்தளம் பள்ளிவாசல் துறை முஸ்லிம் மகா வித்தியாலயம். மட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம் என்வற்றில் கடமையாற்றி 1999 ஜனவரி 20 முதல் மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி இல் இன்றுவரை 17 வருடகால சேவையை நிறைவு செய்துள்ளார். அத்துடன் பரீட்சைத் திணைக்களத்தின் க.பொ.த.உயர்தர வரலாற்றுப் பாடத்திற்கான பிரதம மேற்பார்வையாளராகவும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



























Post a Comment

0 Comments