கணவனை கொலை செய்து விட்டு தனது 3 வயது மற்றும் 5 வயது பிள்ளைகளை தனிமையில் விட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய தாய் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
19ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் சிறுவர்கள் இருவரும் 5 நாட்கள் தந்தையின் சடலத்துடன் தனிமையில் இருந்துள்ளதுடன் அந்த காலப்பகுதியில் அவர்கள் இருவரும் வீட்டிலிருந்த வாழைக் குலையிலிருந்த வாழைக் காய்களை உண்டு பசியை தனித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments