கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் போது மண்சரிவுகள் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்படி மேல் மாவட்டத்திலும், சப்ரகமுவ மாகாணத்திலுமே இவ்வாறு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் சபரகமுவ மாகாணத்தில் மாத்திரம் 28 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் 63,318 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments