Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

என்னை மிரட்டிய பவுலர்கள்: மனம் திறக்கும் மெக்கல்லம்

அதிரடி ஆட்டத்துக்கு பெயர்போன நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், பந்துவீச்சில் அவரை மிரட்டிய பவுலர்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் விவரித்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரன், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக், பிரெட் லீ மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
தான் எதிர்கொள்ளும் முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பும் திறமைவாய்ந்த சில வீரர்களில் ஒருவரான மெக்கல்லம், சர்வதேச போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். பவுலர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் மெக்கல்லத்தின் விக்கெட்டை ஆறுமுறை கைப்பற்றியவர் இந்திய அணியின் ஜாகிர் கான் என்பது குறிப்பிடத்தக்கது. 5 முறை அவரது விக்கெட்டைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ இருக்கிறார்.

Post a Comment

0 Comments