Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அவர்களினால் கணவனை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூகசேவைகள் திணைக்களத்தில் வைத்து  செவ்வாய் கிழமை நண்பகல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அவர்களினால் கணவனை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அதிதியாக கலந்து கொண்டு இவ்வுபகரணங்களை வழங்கி வைத்தார். 2015ஆம் ஆண்டுக்கான மாகாணசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட தையல் இயந்திரங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது  சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகஸ்த்தர் ஏ.நஜீம் மற்றும்  மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார உதவிகள் தொடர்பான கோரிக்கை சமூகசேவைகள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படும் பொழுது அவர்களுக்கான உதவிகளை எதிர்வரும் 2016ஆம் வருடத்திற்கான மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கி வைப்பதாக தெரிவித்தார்.


கடந்த காலத்தில் இந்திய அரசாங்கத்தினால் கணவனை இழந்த பெண்களுக்காக வழங்கப்பட்ட நிதி உதவி ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டிருந்தால் தற்போது இவர்கள் துன்பப்பட வேண்டிய அவசியம் இல்லை. தனிப்பட்டதொரு கட்சியின் நடவடிக்கையினால் முறைகேடான நிகழ்வுகள் இடம்பெற்றதினால் அவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள்,மற்றும் வாழ்வாதார உதவிகள போன்றன வழங்கப்படவில்லை என்று கிழக்கு மாகாணசபை உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டோர் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments