தேசிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் மலையகத்தின் கொட்டகலை வூட்டன் ஹில்ஸ்ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிலும் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்திலும்வெகு விமர்சையாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதா கிருஸ்ணன் தலைமையில் இன்றுகொண்டாடப்பட்டது.
கல்வி இராஜாங்க அமைச்சு, நேத்திரா தொலைகாட்சி, ஹட்டன் டிக்கோயா நகர சபை, ஹட்டன் பொலிஸ், கல்வி வலைய பணிமனை, அம்பகமுவ பிரதேச செயலகம், அம்பகமுவ பிரதேச சபை, நுவரெலியா பிரதேச சபை, ஹட்டன் நகர வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், முத்தையா ராமசாமி,சோ.ஸ்ரீதரன், சிங்பொன்னையா, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், முன்னாள் ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் அழகமுத்து நந்தகுமார் உட்பட பெரும் திரலான பொது மக்களும் கலந்துக் கொண்டனர்.
இன்று காலை 7.00 மணிக்கு கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் பூஜைகளும் இடம்பெற்றது.
தொடர்ந்து பாரம்பரிய கலைகலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றன. போட்டிகளில் சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டபோட்டி கொட்டகலை நகரத்தில் ஆரம்பமாகி ஹட்டன் நகரில் நிறைவடைந்தது.
இதேவேளை, ஹட்டன் டன்பார் மைதானத்தில் போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 Comments