கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடிசுவாமி மலை கிராமத்தினைச் சேர்ந்த 29வயதினையுடைய யோகராசா ஜெகநாதன்(கணேஸ்) என்ற இளம் குடும்பஸ்தர் தனது தோட்டத்தில் நீர் இறைக்கச் சென்ற போது உயிரிழந்த சம்பவம் இன்று(14) நிகழ்ந்துள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த இளைஞன் மரணமடைந்தமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மரணமடைந்த இளைஞன் தனது கிராமத்தின் சிறந்த சமூகசேவையாளன் என்பதுடன் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும், ஆலயத்தின் செயலாளராகவும், வனவிலங்கு பரிபாலன சபையின் கிராமமட்ட உறுப்பினரும், மீனவர் சங்கம் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு என்பவற்றின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
0 Comments