அகவை அறுபதை 18.04.2016 அன்று பூர்த்தி செய்த தா.கோபாலகிருஷ்ணன் ஓய்வுபெற்ற ஆசிரியர் தான் எழுதிய “வாழ்வாங்கு வாழ்வோம்” எனும் நூலை மணிவிழா மலராக வெளியீடு செய்தார்.
அதிபர் க. பிரபாகரன் தலைமையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை கலைக்கூட மண்டபம், களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இவ் வெளியீட்டு விழாவின் ஆண்மீக அதிதியாக விஸ்வப் பிரம்மம் Y.E.S. காந்தன்
குருக்களும், பிரதம அதிதியாக மாகாண சபை உறுப்பினர் கௌரவ. ஞா.கிருஷ்ணபிள்ளையும் கலந்து கொண்டனர். சிறப்பு அதிதிகளாக பொது நிருவாக அமைச்சின் மேலதிக செயலாளர் சி.பாஸ்கரன், சட்டத்தரணி சு.ஸ்ரீஸ்கந்தராசா, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி, முன்னாள் சே.கா.ஆ.ஆலோசகர் இ.கிருஷ்ணபிள்ளை, முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் ஐ.சுப்பிரமணியம்,முன்னாள் விவசாய பிரதி பணிப்பாளர் நவேந்திரன், மூத்த எழுத்தாளர் அ.மு.சி வேலழகன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வரவேற்புரையினை பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் கலாநிதி நா.நாகேந்திரனும்,ஆசிரியர் அறிமுக உரையினை முன்னாள் தொ.க.போதானாசிரியர் கலாபூசணம் மு.தம்பிப்பிள்ளையும், வாழ்த்துப்பாவினை ஆசிரியர் க.குணரெத்தினமும், நூல் நயவுரையினை ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் வ.ஜீவநாதனும், நன்றியுரையினை ஐ.சுப்பிரமணியமும் வழங்கியிருந்தனர்.
0 Comments