வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 95 வயதான பெற்ற தாயை அறைக்குள் மகன்அடைத்துவைத்துள்ளார் என்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்படுள்ளது.
இதனையடுத்து குறித்த தாயை மீட்ட பொலிஸார், அவரை வைத்தியசாலையில்சேர்த்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா சாந்தசோலைக் கிராமத்தில் வசித்துவரும் மகன் தனது தாயை 5வருடங்களாக அறைக்குள் அடைத்து வைத்துள்ளார் என்று பொதுமகன் ஒருவரால் வவுனியாபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.
இதனையடுத்து சம்பவஇடத்துக்கு நேற்று விரைந்த பொலிஸார் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மகனிடம் வினவியபோது, "எனது தாயை நான்அடைத்துவைக்கவில்லை. அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 5 வருடங்கள் அவரைஅறைக்குள் வைத்து நல்லமுறையில் பராமரித்து வந்தேன்.
வவுனியா பொலிஸ்நிலையத்தில் தவறான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது" - என்றார்.
தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என்றால் அவரை ஏன் 5 வருடங்களாக வைத்தியசாலையில் சேர்க்காமல் வைத்திருந்தீர்கள் என்று மகனிடம் வினவியபோது,
அதற்கு அவர் பதில் எதனையும் வழங்கவில்லை. மகனை பொலிஸார் கைதுசெய்யவில்லை.
எனினும், இது தொடர்பில் தாம் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றோம் என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments