எதிர்வரும் மாதத்தில் புதிதாக 3779 அதிபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதில் மேல் மாகாணத்தில் 760,
மத்திய மாகாணத்தில் 584,
தென் மாகாணத்தில் 532,
வடமேல் மாகாணத்தில் 427,
வடமத்திய மாகாணத்தில் 264,
சப்ரகமுவ மாகாணத்தில் 252,
வட மாகாணத்தில் 380,
கிழக்கு மாகாணத்தில் 338
என்ற அடிப்படையில் புதிதாக அதிபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தோற்றியிருந்தனர்.
இதில் 4079 பேர் நேர்முகத் தேர்விற்காக தகுதி பெற்றுக்கொண்டிருந்தனர்.
சுமார் 300 பேர் நேர்முகத் தேர்வின் போது அதிபராகும் தகுதியை பெற்றுக்கொள்ளவில்லை.
ஏனைய 3779 பேர் எதிர்வரும் மாதம் அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, புதிய அதிபர்களுக்கு உரிய முறையில் பாடசாலைகள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
0 Comments