3ஆம் வகுப்பு நியமனம் பெறவுள்ள 3,779 அதிபர்களுக்கு
புது வருட விடுமுறைக்குப் பின்னர் நியமனக் கடிதங்கள் பதிவுத் தபாலில் அனுப்பப்படும்
02.05.2016 முதல் சேவை செய்யும் மாகாணங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி ஆரம்பமாகும்
இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தகவல்
கடந்த மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தகைமை பெற்ற 3,779 3ஆம் வகுப்பு அதிபர்களுக்கான நியமனக் கடிதம் புது வருட விடுமுறைக்குப் பின்னர் பதிவுத் தபாலில் அனுப்பப்படும் .மாகாண அடிப்படையில் நியமனம்பெற உள்ளவர்களின் தொகை பின்வருமாறு
மாகாணம் ..........................தொகை
வட .........................................380
கிழக்கு.....................................338
மேல்........................................760
மத்திய.....................................584
தென் .......................................531
வடமேல் ................................428
வடமத்திய .............................264
ஊவா ......................................243
சப்பிரகமுவ ............................251
மொத்தம் .............................3,779
நியமனக் கடிதம் கிடைத்தவுடன் நியமனத்தை பொறுப்பு எடுத்தது தொடர்பாக கடமையாற்றும் பாடசாலையின் அதிபர் ஊடாக அறிவிக்க வேண்டும் .பின்னர் மாகாணங்களில் உள்ள வெற்றிடங்களின் படி நியமனங்கள் வழங்கப்படும் .பெரும்பாலும் கடைமையாற்றும் மாகாணங்களில் தான் நியமனங்கள் வழங்கப்பட உள்ளது
மிகுதி சுமார் 200 பேர்களில் தகைமை தொடர்பாகப் பிரச்சினைகள் இருப்பதால் அரச சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்
0 Comments