குளியாபிடிய சிறுவனை கண்டி டிரினிடி கல்லூரியில் அனுமதிப்பது தொடர்பிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
குளியாபிடிய பகுதியிலுள்ள சிறுவன் ஒருவனின் தந்தை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு எயிட்ஸ் நோய் இருந்ததாகவும் அதனால், குறித்த சிறுவனும் எச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் வதந்தி பரவியது.
இதனையடுத்து, அவர் கல்வி கற்று வந்த பாடசாலையில், தொடர்ந்து கற்றல் செயற்பாடுகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கருதி குறித்த பாடசாலையிலுள்ள மற்றைய மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்ததே இதற்குக் காரணம்.
இதனையடுத்து, இது குறித்து அவதானம் செலுத்திய கல்வி அமைச்சு, தற்போது அவரை கண்டி டிரினிடி கல்லூரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் கண்டி டிரினிடி கல்லூரி அதிபர் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
0 Comments