Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தினேஷ்- சுமந்திரன் சபையில் கடும் வாய்த்தர்க்கம்

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கில் 7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமல்போயுள்ளனர் என்றும் அவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர்  என்றும் மகிந்த ஆதரவு அணி உறுப்பினரான தினேஷ் குணவர்தன எம்.பி.சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் கடும் ஆட்சேபனை வெளியிட்டார்.
இதனையடுத்து காணாமல்போனோர் விவகாரம் குறித்து சுமந்திரனுக்கும் தினேஷ் குணவர்தனவுக்குமிடையில்
சபையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று  நடைபெற்ற காணாமல்போனோர் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில், காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து போலியானது.
பரணகம ஆணைக்குழுவின் பிரகாரம் 7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமல்போயுள்ளனர். அவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். புலிகளால் கடத்தப்பட்டவர்களே காணாமல்போயுள்ளனர் என்றெல்லாம் விமர்சனங்களை அடுக்கிக்கொண்டு சென்றார் தினேஷ்  எம்.பி.
இதன்போது குறுக்கீடு செய்த சுமந்திரன், எம்.பி.தினேஷ் குணவர்தன வெளியிட்ட கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார். சுமந்திரன் எம்.பி.யின் ஒலிவாங்கி அவ்வேளையில் இயக்கிவிடப்படாததால் அவர் வெளியிட்ட கருத்துக்கள் விளங்கவில்லை. எனினும் கடும் சீற்றத்துடன் தினேஷ் குணவர்தனவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் குணவர்தன, புலிகளுக்காக செயற்பட்டவர்களுக்கு, செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு தாங்க முடியாதுதான் என்று குறிப்பிட்டார்.  தினேஷ் குணவர்தனவுக்கு சார்பாக அவரது கட்சி உறுப்பினரான சிசிர ஜயக்கொடியும் பிரசன்ன ரணதுங்க எம்.பி.யும் குரல் எழுப்பினர்.
அப்போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் இனவாதம் பேசவேண்டாம் என அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை இவ்விவாதத்தின்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் தினேஷ் குணவர்தனவுக்குமிடையிலும் கருத்து மோதல் ஏற்பட்டது.
7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமல்போயுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார் என தினேஷ் குணவர்தன எம்.பி. தெரிவித்தபோது, அதற்கு அமைச்சர் மங்கள கடும் எதிர்ப்பை வெளியிட்டார். நான் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இதனால் கொதிப்படைந்த தினேஷ் குணவர்தன “நாட்டைக்காட்டிக்கொடுத்த’ வெளிவிவகார அமைச்சர் என மங்களவை தாக்கிப் பேசினார். இவ்வாறு இருவருக்குமிடையில்  கடும்  சொற்றோர்
இடம்பெற்றது.

Post a Comment

0 Comments