பாதாள குழுக்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 175 பேர் தொடர்பான தகவல்களை திரட்டியுள்ள பாதாள குழுவினரை ஒழிப்பதற்கான விசேட பொலிஸ் அணியினர் அதனை அடிப்படையாக கொண்டு அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
குறித்த நபர்கள் இருக்கும் இடங்கள் , அவர்களின் பின்னணியிலுள்ள அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினர் யார் , அவர்களால் இடம்பெற்ற குற்றச் செயல்கள் போன்ற தகவல்களை இரகசியமான முறையில் விசேட பொலிஸ் அணி திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி கொழும்புக்குள் 125 பேரின் செயற்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கம்பஹா , கட்டுநாயக்க , நுகேகொட போன்ற பிரதேசங்களிலும் மற்றும் தென் மாகாணத்திலும் பாதாள குழுவை சேர்ந்த பலர் இருப்பதாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு அவர்கள் தொடர்பாக விசேட பொலிஸ் அணியினரால் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
0 Comments