திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் பகுதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியது.
24.02.2016 அன்று பிற்பகல் வேளையில் பரவிய தீ காரணமாக இந்தப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாராவது தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
தீயை கட்டுப்படுத்த திம்புள்ள – பத்தனை பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள – பத்தனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்படுத்த மாலை 5.30 மணிவரை முயற்சித்தனர்.
ஆனால் சில பகுதிகளில் மட்டுமே அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.
எனினும் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 15 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
0 Comments