Home » » பாராளுமன்றத்தில் ஸ்ரீநேசன் M.P

பாராளுமன்றத்தில் ஸ்ரீநேசன் M.P

அந்நியர்களால் சிறுபான்மையோருக்கென்று வகுக்கப்பட்ட காப்பீடுகளை எமது நாட்டின் ஆட்சியாளர்களே தகர்த்து விட்டனர். ஆங்கிலேயரால் இலங்கைக்கு வரைந்தளிக்கப்பட்ட "சோல்பரி" யாப்பில் சிறுபான்மை மக்கள் விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு இருந்தது, அதற்கென்று சிறுபான்மையோர் காப்பிட்டு ஏற்பாடுகள் வளங்கப்படிருந்தன. அவற்றை எல்லாம் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட எமது ஆட்சியாளர்களே வழங்க மறுத்துவிட்டனர். என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஞா . ஸ்ரீநேசன்  அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 'புதிய அரசியலமைப்புக்கான முன் மொழிவுகள்' விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர் சோல்பரி யாப்பின் 29 ஆவது சரத்தின் இரண்டாவது  உபபிரிவில் உள்ள நான்கு விதிகள் காணப்பட்டன. அவை எந்தவொரு சமுகப்பிரிவினரதும் சுதந்திரமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த இயலாத வகையிலும் ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்கப்படாத சிறப்புரிமைகளை வேறு ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்க முடியாத வகையிலும் அமைந்து இருந்தது. 

இதனோடு இணைந்து கீழ் சபையின் ஆறு நியமான உறுப்பினர்கள், மேல் சபையான செனட் சபை, சுதந்திரமான நீதிச்சேவை ஆணைக்குழு, நடுநிலையான பொதுச்சேவை ஆணைக்குழு , பல அங்கத்துவ தேர்தல் தொகுதிகள், கோமறைக்கழகம் என்பன சிருபன்மையோரை பாதுகாப்பதற்காக ஆங்கிலேயரால் எமக்கு அளிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த யாப்பு மாற்றப்பட்டு 1972யில் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு யாப்பில் சிறுபான்மையோர் காப்பிட்டு அம்சங்கள் நீக்கப்பட்டு இருந்தன. அந்த யாப்பில் அரச கரும மொழி சிங்களம் என்றும் அரச மதம் பௌத்தம் என்றும் பொறிக்கப்பட்டதோடு  சிறுபான்மை தமிழ் மொழியும், மதங்களும் புறக்கணிக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டன .


தொடர்ந்து 1978 இல் கொண்டு வரப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பிலும் கூட சிங்கள மொழி, பௌத்த மதம் என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. எனவே தமிழ் இளைஞர்கள்  ஜனநாயக வழியில் நம்பிக்கையிழந்து வன்முறை அரசியலுக்குள் தள்ளப்பட்டனர். 30 வருட கால உள்நாட்டு யுத்தமும் நீடித்தது இதன் ஊடாக இவ் அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டி படிப்பினைகள் பல உள்ளன. எனவே புதியதொரு அரசியல் யாப்பு பற்றிய சிந்தனையை நல்லாட்சி என்று சொல்லப்படும் அரசாங்கம் எட்டியுள்ளது. ஆதலால் கடந்த கால கசப்பான படிப்பினைகளை கருத்தில் கொண்டு இனிமேலும் அமையப்போகின்ற அரசியல் யாப்பானது முன்னைய யாப்புகளைப் போன்றல்லாமல் ஒற்றயாட்சி பரிமாணம் நீக்கப்பட்டு  கூட்டாட்சி தத்துவம் அமையக் கூடியதாகவும், நியாயமானதும் நீடித்து நிற்கக் கூடியதுமாகவும் அமைய வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |