சட்ட விரோதமான முறையில அவுஸ்திரெலியாவுக்கு சென்றிருந்த 15 இலங்கையர்கள் நேற்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக திருப்பியனுப்பப்பட்டவர்களில் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் சிலர் இங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து கடல் வழியாக அவுஸ்திரெலியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக அங்கு சென்ற இவர்களை அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசேட விமானம் மூலம் நேற்றைய தினம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளனர்.
இதன்படி இங்கு வந்த 15 பேரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் ஆரம்பக் கட்ட விசாரணையை தொடர்ந்து குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை இவர்கள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments