Advertisement

Responsive Advertisement

யோஷித்த 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட 5 பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று மீண்டும் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மஹிந்த ராஜபக்‌ஷ , சிராந்தி ராஜபக்‌ஷ , நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் யோஷித்த ராஜபக்‌ஷவை பார்வையிடுவதற்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments