இலங்கையில் ஸ்மார்ட் மின் மானி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் இம்மாதம் முதல் அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் மின்வலு மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மக்கள் தாம் எந்த நேரத்தில் அதிகமான மின்சாரத்தை பயன்படுத்துகின்றோம். அதன் அளவு என்பன உள்ளிட்ட விடயங்களை அறிந்துக்கொள்ளக் கூடிய வகையில் அதனை வீடுகளில் பொறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த திட்டம் வரும் 8 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments