கடந்த கால படிப்பினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட யாரோ அவரை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
உதாரணமாக கடந்த காலங்களில் தலைமைப்போட்டி காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தேவையில்லாத விமர்சனங்களை சுமந்திரன் மீது முன்வைத்து வந்தார். சுமந்திரன் பின்கதவால் வந்தவர் என அவரை சீண்டி வந்தார். இதன் விளைவாக சுமந்திரன் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதன் விளைவு சுமந்திரன் வென்றார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தோற்றார். எனவே நாவடக்கம் இல்லாததன்மைதான் இந்த பிரச்சினைக்கு காரணம். தேசிய பட்டியலை பின்கதவு என கேலி செய்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பின்னர் அதேபின்கதவை தட்டியிருக்கிறார். இன்றும் கூட அடுத்த தலைவர் யார் என்ற போட்டியில் தான் சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் பேரவையில் இணைந்திருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
0 Comments